மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தாண்டும் தாண்டும்
ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசை பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சு காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சிணுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்று
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்
வாசம் தூணை நானும் ஆனேன்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்.
Blog Entry
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
3 Responses to 'மாலை மங்கும் நேரம் ஒரு மோகம்'
Comment by sundar c.
what an memorizing romantic melody...each & every line is lovely..great thamarai..
Comment by Nayagan.
its my fvrt song & also my 1st caller tone, i like this very mam
Comment by subramani periyannan.
Ekkangal...Ekkangal......Evvalvu poonjai manathai Enga vaippai
Post a Comment