எங்கே என்று போவது யாரை சொல்லி நோவது.

by , under

எங்கே என்று போவது
யாரை சொல்லி நோவது.

ஏதோ கொஞ்சம் வாழும் போதே
தோற்று தோற்று சாவது.

ரத்தம் கேட்கும் பேய் இது
ராத்திரி பகலா மறையுது.

உறவே இல்லை ஒவ்வொன்றாக
கூறு போட்டு கொல்லுது.

கேட்பதே பிழை என்னும் விழியெலே
உண்மை இல்லை நாட்டில்.

தவருததே மழை தினம் பாடம் பாத்து
மூழுகின்றோம் சேற்றில்.

ஒரு உயிருக்கு இங்கு விலை என்ன
வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன.

தினம் நானும் வெய்யில் காணும் கனவுகள்
கருகி போவும் நிலை என்ன.

ஒரு திறமை இருந்த போதாதா
இடம் தேடி கொண்டு வராதா.

இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே
கெட்ட வார்த்தை ஆகாதா.

மொழி தெரிந்தும் அலைகின்றோம்
தனியாக வளர்கின்றோம்.

தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம்.

மொழி தெரிந்தும் அழைகின்றோம்
தனியாக வளர்கின்றோம்.

தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம்.

ஆட்சிகள் மாறலாம் சாட்சிகள் மாறுமா
சூழ்நிலை மாறலாம் சூழ்ச்சிகள் மாறுமா.

இனி நாம் ஒரு தாயம் கீச்சியே ஏணி ஏறனும்
எதிரி அடி வாங்கி வாங்கி ஓடி போகணும்.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

தீதும் நன்றும் சேர்ந்தே வாழும் ஊரில்
தீமை மட்டும் ஓங்கி நிற்க்கும் வேளை.

காற்றும் கூட காசை கேட்கும் காலம்
வந்தால் நாமும் என்ன நாமும் செய்ய கூடும்.

இது தானா சேர்ந்த கூட்டமடா
இது தானா சேர்ந்த கூட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிரான போராட்டமடா.

இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா.

Popular Posts